வெற்றி விழா கொண்டாடிய விமல் வீரவன்ச!
தன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
இதனால் தனது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமர சூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே விமல் நேற்று போராட்டத்தில் குதித்தார்.
கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று 2ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது.
இந்நிலையில் தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை 2027 ஆம் ஆண்டுவரை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.
இதனையடுத்தே தனது போராட்டம் வெற்றி பெற்றதாகக் கூறி, அதனை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் விமல் வீரவன்ச. கல்வி அமைச்சுக்கு முன்பாக வெற்றி நிகழ்வையும் நடத்தினார்.





