ரஷ்யாவின் மற்றுமொரு கப்பலை கைப்பற்ற முனைப்பு காட்டும் பிரித்தானியா!
விளாடிமிர் புடின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க பிரித்தானியாவின் சிறப்பு படைகள் ரஷ்ய நிழல் கடற்படையின் எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சர்கள் புதிய சட்ட காரணங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி தடைகள் மற்றும் பணமோசடி சட்டத்தின் (2018) கீழ் நாடற்றதாகக் கருதப்படும் கப்பல்களை குறிவைப்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை இதற்கு முன்னதாக வட அட்லாண்டிக்கில் மரைனேரா (Marinera) டேங்கரைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்க நடவடிக்கைக்கு இங்கிலாந்து ஆதரவளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





