ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்த கியூபா : பேச்சுவார்த்தைகள் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்!
வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து கியூபா காலதாமதமின்றி உடன்பாடு ஒன்றை எட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல் (Miguel Díaz-Canel) தனது நிர்வாகம் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாது எனக் கூறியுள்ளார்.
“அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான உறவுகள் முன்னேற, அவை விரோதம், அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார வற்புறுத்தலை விட சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று கியூப ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய அரசு உட்பட பல்வேறு அமெரிக்க அரசாங்கங்களுடன் இறையாண்மை சமத்துவம், பரஸ்பர மரியாதை, சர்வதேச சட்டத்தின் கொள்கைகள் மற்றும் உள் விவகாரங்களில் தலையிடாமல் பரஸ்பர நன்மை மற்றும் நமது சுதந்திரத்திற்கு முழு மரியாதையுடன் ஒரு உரையாடலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.





