செய்தி

போருக்கு தயாராக இருக்கிறோம் – ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதில்!

அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறை தொடர்பாக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் ‘போருக்குத் தயாராக’ இருப்பதாக அறிவித்துள்ளது.

சைபர் தாக்குதல்கள் மற்றும் நேரடித் தாக்குதல்கள் உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைக்கு ‘மிகவும் வலுவான விருப்பங்களை’ பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்கள் வெளிநாட்டு தலையீட்டைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

ஈரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது 544 பேர் இறந்ததாக கண்காணிப்புக் குழுக்கள் தெரிவிக்கின்றன, இறப்பு எண்ணிக்கை 500 ஐத் தாண்டியுள்ளதாகவும், 10,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே அமெரிக்காவும் இந்த விடயம் தொடர்பில் பரிசீலித்து வருவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!