ஐரோப்பா செய்தி

லண்டனில் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்!

டீசல் கார்கள் இல்லாத இங்கிலாந்தின் முதல் நகரமாக லண்டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நியூ ஆட்டோமோட்டிவ் ( New AutoMotive) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030 முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையைத் தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த கணிப்பு வந்துள்ளது.

இதற்கமைய தலைநகரில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் எரிபொருள் விற்பனையை நிறுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் 8,400 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல நிரப்பு நிலையங்கள் வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இங்கிலாந்தில் டீசல் கார்களின் எண்ணிக்கை 2035 ஆம் ஆண்டுக்குள் 15.5 மில்லியனிலிருந்து தோராயமாக 250,000 ஆகக் குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சில எரிபொருள் நிலையங்கள் டீசல் சேமிப்பை நிறுத்தக்கூடும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!