ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் முறையான முன்னறிவிப்பின்றி குழந்தை நல உதவித்தொகை நிறுத்தம்

பிரித்தானியாவில் மோசடி தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில், ஆயிரக்கணக்கான பெற்றோருக்கான குழந்தை நல உதவித்தொகையை (Child Benefit) நிறுத்திய சுங்க அதிகாரிகளின் (His Majesty’s Revenue and Customs) செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டுத் துறை வழங்கிய அரைகுறை பயணத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 24,000 பேரின் கணக்குகள் முடக்கப்பட்டன.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களில் 63 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் பிரிட்டனிலேயே வசித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தத் தரவுகளில் பிழை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிந்தும், அதை ஒரு ‘சாதாரண அபாயமாக’ அதிகாரிகள் கருதியது உள்நாட்டு ஆவணங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளிக்க சுங்க உயர் அதிகாரிகள் (His Majesty’s Revenue and Customs) நாளை நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராக உள்ளனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!