“புராஜெக்ட் நைட்ஃபால்” : உக்ரைனுக்காக புதிய ஏவுகணைகளை தயாரிக்கும் பிரித்தானியா!
உக்ரைனுக்கு வழங்க புதிய தந்திரோபாய பால்ஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏவுகணைகளுக்கு “புராஜெக்ட் நைட்ஃபால்” (Project Nightfall) என பெயரிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healey) கூறினார்.
புதிய ஏவுகணைகள் 200 கிலோ எடையும் 500 கி.மீ தூரமும் செல்லும் திறன் கொண்டவை எனக் கூறப்படுகிறது. அவை ரஷ்ய எல்லைக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு உக்ரைனில் ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.





