நாகை – காங்கேசன் துறை கப்பல் சேவை அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்
நாகை – காங்கேசன் துறை கப்பல் சேவை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. அத்துடன் டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன் துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் காங்கேசன் துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றன.
இதன்பின்னர் நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறையிலான கப்பல் சேவை மூன்றரை மாதங்களுக்கு அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இந்த முறை நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவையின் போது பயணிகள் அதிகம் செல்லும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.





