பிரித்தானியத் தூதர் பதவி பறிபோன பின் லார்ட் வழங்கிய முதல் நேர்காணல்
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) உடனான நட்புக்காக அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட லார்ட் மேண்டல்சன் (Lord Mandelson), எப்ஸ்டீனின் பாலியல் குற்றங்கள் குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
பிபிசி-க்கு வழங்கிய நேர்காணலில், எப்ஸ்டீனின் வசிப்பிடங்களில் தான் இருந்தபோது வயதான பணிப்பெண்களைத் தவிர வேறு எவரையும் பார்க்கவில்லை என்றும், அவரது பாலியல் வாழ்க்கையிலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்புக் கேட்க மறுத்த அவர், பெண்களைப் பாதுகாக்கத் தவறிய கட்டமைப்புக்காகத் தான் வருந்துவதாகக் கூறினார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் கருத்துகளைப் பாராட்டிய மேண்டல்சன், எப்ஸ்டீனுக்கு ஆதரவாக மின்னஞ்சல் அனுப்பிய சர்ச்சையால் தமது பதவி பறிபோனதை ஏற்பதாகத் தெரிவித்தார்.





