வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு அஞ்சுகிறதா இலங்கை?
” ஐ.நாவின் சமவாயங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக அங்கத்துவ நாடொன்று செயல்படுமானால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு அஞ்சும் வகையிலேயே இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்புகள் உள்ளன என்பது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள், சமவாயங்கள் மற்றும் கொள்கைகள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே உலக நாடுகள் செயல்பட வேண்டும்.
இதற்கு எதிராக அங்கத்துவ நாடொன்று செயல்படும்பட்சத்தில் ஐ.நா பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு. இது வியடத்தில் நாம் உறுதியாக உள்ளோம்.
கட்சியென்பது வேறு, அரசாங்கமென்பது வேறு. இவை இரண்டையும் ஒன்றாக கருதி செயல்பட்டதால்தான் கடந்த காலங்களில் பிரச்சினை ஏற்பட்டது. சில அரசாங்கத்துக்குள் குடும்பத்தையும் கொண்டுவந்தனர்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. உரிய இடங்களில் எமது நிலைப்பாடுகள் தெரிவிக்கப்படும்.
இப்போது நாம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். எதிரணிகள் செய்வதை அரசாங்கத் தரப்பில் இருந்து எதிர்பார்க்க முடியாது.” –எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.





