ரஷ்யாவில் பற்றி எரியும் வோல்கோகிராட் எண்ணெய் கிடங்கு!
ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு உக்ரேனிய ட்ரோன் தாக்குதலால் தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது.
உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் உக்ரைன் ரஷ்ய எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது வான் பாதுகாப்பு படைகள் 0600 GMT நிலவரப்படி 67 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.





