பாகிஸ்தானில் நில உரிமையாளரால் சுட்டு கொல்லப்பட்ட இந்து விவசாயி
பாகிஸ்தானின்(Pakistan) சிந்து மாகாணத்தில் நில உரிமையாளரால் ஒரு இந்து விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், இது நாட்டில் உள்ள சிறுபான்மை குழுக்களின் பெரும் போராட்டங்களைத் தூண்டியது.
சர்பராஸ் நிஜாமணி(Sarfaraz Nizamani) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், இந்து விவசாயி கைலாஷ் கோல்ஹியின்(Kailash Kolhi) மார்பில் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து சிந்து(Sindh) மாகாணத்தில் பல இந்து சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் பாகிஸ்தான் கூட்டாட்சி மற்றும் உள்ளூர் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றன.
குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யவும் அவர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் சம்பவம் குறித்த விசாரணைக்காக சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.





