யாழ்ப்பாணத்தில் 10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
யாழ் மாவட்டத்தில் சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய,
யாழ்ப்பாணம் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே ஐந்து சந்திப் பகுதியில் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடமிருந்து சுமார் 3,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .





