அமெரிக்காவின் மிசிசிப்பியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் மரணம் – சந்தேக நபர் கைது
அமெரிக்காவில்(America) மிசிசிப்பியின்(Mississippi) கிளே கவுண்டியில்(Clay County) நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்ட அமலாக்கத் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்ததாக NBC செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், “சந்தேக நபர் காவலில் உள்ளார். எங்கள் சமூகத்திற்கு இனி அச்சுறுத்தல் இல்லை” என்று அதிகாரி எடி ஸ்காட்(Eddie Scott) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பாதிக்கப்பட்டவர்களுக்காக உங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்” என்று எடி ஸ்காட் தெரிவித்துள்ளார்.





