கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்காவிற்கு பிரித்தானியா ஆதரவளிக்குமா?
கிரீன்லாந்து மீதான படையெடுப்பை எளிதாக்க அமெரிக்கா தனது இராணுவ தளங்களைப் பயன்படுத்த பிரித்தானியா அனுமதிக்காது என பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) வழங்கிய பேட்டியில், “கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நேட்டோவின் ஒரு பகுதியாகும்.
ஒப்பந்தக் கடமைகளுடன் நாங்களும் அமெரிக்காவும் அந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் இங்கிலாந்தின் ஆதரவைப் பொறுத்தவரை, நோக்கம் சரியாகவும் சட்ட அடிப்படை சரியாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதைத் தடுக்க அமெரிக்கா கிரீன்லாந்தை சொந்தமாக்க வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
அத்துடன் இதற்காக இராணுவ பலத்தை பிரயோகிப்பதையும் அவர் மறுக்கவில்லை. இந்நிலையில் டென்மார்க் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.





