சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவுடன் கைக்கோர்க்கும் இந்தியா!
சர்வதேச ரீதியில் வளர்ந்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய அரசாங்கம் சீனாவுடன் கைக்கோர்க்க தேவையான முன்னாயத்தை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கமைய சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதனை நடைமுறைப்படுத்த பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் அவசியமாகும்.
இதற்கிடையே தேசிய பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதா அல்லது ஓரளவு தளர்த்துவதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை 2020 கல்வான் மோதலுக்குப் பிறகு சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக உயர்மட்ட அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பதற்றங்கள் ஓரளவு நிறைவுக்கு வந்துள்ளதுடன், தூதரக ரீதியான உறவுகள் மேம்பட ஆரம்பதித்துள்ள சூழ்நிலையில் இந்த விடயங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக டெல்லியை தலைமையாக கொண்டு இயங்கும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





