பொத்துவில் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – மீனவர்களின் கவனத்திற்கு!
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (08) காலை ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. மேலும் அடுத்த சில மணி நேரத்தில் கிழக்கு கடற்கரையை அடையும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் ஒரு சில பகுதிகளில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். அதேநேரம் நாடு முழுவதும் மணிக்கு 50 – 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





