இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக விக்ரம் நியமனம்
எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இலங்கை அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் (Vikram Rathour) நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024-ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசிய அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றி, இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அவர், தற்போது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகச் செயற்பட்டு வருகிறார்.
எதிர்வரும் ஜனவரி 15-ஆம் திகதி அவர் இலங்கை அணியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் (R. Sridhar) இலங்கை அணியுடன் இணைந்துள்ள நிலையில், ரத்தோரின் வருகை இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





