தையிட்டி வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராடியவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிப்ரவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.





