அமெரிக்காவின் உத்தரவு – கிழக்கு கரீபியன் முழுவதும் விமான சேவைகள் இரத்து!
வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை, கரீபியன் விமானப் பயணத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கரீபியன் முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும், நேற்றைய தினம் எந்தவொரு விமானமும் வெனிசுலாவின் வான்வெளியை கடக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, புவேர்ட்டோ ரிக்கோ ( Puerto Rico), விர்ஜின் தீவுகள் மற்றும் அருபா (Aruba) உள்ளிட்ட இடங்களுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜெட் ப்ளூ, யுனைடெட், சவுத்வெஸ்ட், அமெரிக்கன் மற்றும் டெல்டா போன்ற விமான நிறுவனங்கள் கட்டணங்களை தள்ளுப்படி செய்துள்ளன.
மேலும் வெனிசுலாவில் “இராணுவ நடவடிக்கை தொடர்பான பாதுகாப்பு நிலைமை” காரணமாக ஏற்படும் இடையூறுகள் பல நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





