பிரேசிலில் பேருந்து மற்றும் லாரி மோதி விபத்து – 11 பேர் உயிரிழப்பு
தெற்கு பிரேசிலில்(Brazil) பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் ஃபெடரல் நெடுஞ்சாலை காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல்(Rio Grande do Sul) மாநிலத்தில் உள்ள ஃபெடரல் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தின் விளைவாக லாரியின் ஒரு பகுதி பேருந்தின் உள்ளேயே சிக்கிக்கொண்டதால் மீட்புப் பணியாளர்கள் வாகனத்தை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.





