NPP அரசை வீட்டுக்கு அனுப்புவோம்: நாட்டை பொறுப்பேற்க நாமல் தயார் என்கிறது SLPP!
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வீட்டுக்கு அனுப்படும். மாகாணசபைத் தேர்தலில் அதற்குரிய ஆரம்ப புள்ளி வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
ஜனநாயக வழியில் நாட்டை பொறுப்பேற்பதற்கு நாமல் ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார் என்று என்று அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சானக வக்கும்புர Chanaka Wakumbura தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலுவடைந்துவருகின்றது. முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி தமது பலத்தை காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.
மாகாணசபைத் தேர்தல் உட்பட அடுத்து நடக்கும் தேர்தல்களில் நாமல் ராஜபக்ச தலைமையில் மொட்டு கட்சி வெற்றிநடைபோடும்.
தேசிய மக்கள் சக்தியை வீட்டுக்கு அனுப்புவதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம். கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் வீட்டுக்கு அனுப்படும்.
ஜனநாயக வழியிலேயே ஆட்சியை பிடிப்போம். சதி நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்.
ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்பதற்கு நாமல் ராஜபக்ச தயாராகவே உள்ளார். மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார்.” – என சானக வக்கும்புர மேலும் குறிப்பிட்டார்.





