சிரியாவில் தற்கொலை படை தாக்குதல் – ஒருவர் மரணம்
சிரியாவின்(Syria) அலெப்போவில்(Aleppo) காவல்துறை அதிகாரிகள் குழு மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் மாநில செய்தி நிறுவனமான சனா(SANA) தெரிவித்துள்ளது.
புத்தாண்டுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அலெப்போவின் வரலாற்று மையத்திற்கு அருகிலுள்ள பரபரப்பான நகரத்தின் பாப் அல்-ஃபராஜ்(Bab al-Faraj) பகுதியில் தாக்குதல் நடத்தியவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் சென்ற போது குறித்த நபர் வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக அலெப்போ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தாக்குதலின் சூழ்நிலைகளை கண்டறிய புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாகவும் சம்பவ இடத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுவரை எந்தக் குழுவும் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.





