சுரினாமில் 9 பேரை கொன்ற நபர் சிறையில் தற்கொலை
சுரினாமில்(Suriname) சொந்த குழந்தைகள் உட்பட ஒன்பது உயிர்களைக் கொன்ற நபர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
43 வயதான தாக்குதல்தாரி, தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் உள்ள சிறிய நாட்டில் உள்ள ஒரு காவல் நிலைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுரினாமின் தலைநகர் பரமரிபோவில்(Paramaribo) நடந்த கத்தி குத்து தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அவரது 11 வயது மகளை அவர்களின் வீட்டின் சமையலறையில் 44 முறை குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
சுரினாமில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம்





