MH370 தேடுதல் மீண்டும் தொடக்கம்
கடந்த 2014-ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தைத் தேடும் பணிகள், நாளை (டிசம்பர் 30) மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளன.
‘ஓஷன் இன்ஃபினிட்டி’ (Ocean Infinity) என்ற கடல்சார் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மலேசிய அரசு இதற்கான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
“விமானம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே 70 மில்லியன் டொலர் ஊதியம்” என்ற அடிப்படையில், இந்தியப் பெருங்கடலின் புதிய பகுதியில் சுமார் 55 நாட்களுக்கு இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
11 ஆண்டுகளாக விடை தெரியாத இந்த வான்வழி மர்மத்திற்கு, அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் இம்முறை தீர்வு கிடைக்கும் எனப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.





