உலகம் செய்தி

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் முழுமையான போரில் ஈடுபடும் ஈரான்!

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian), தனது நாடு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் “முழுமையான போரில்” ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் 1980களில் இடம்பெற்ற  ஈரான்-ஈராக் போரை விட மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த போரினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கத்தேய சக்திகள் ஈரானை ஒவ்வொரு அம்சத்திலும் முற்றுகையிட்டு, பொருளாதார, கலாச்சார, அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை உருவாக்குவதாகவும்  அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்க சில நாட்களே உள்ள நிலையில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஈரான் தொடர்பான விடயங்கள் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஈரானில்  விரிவடைந்து வரும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!