வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் உடல்நிலை கவலைக்கிடம்
வங்கதேசத்தின்(Bangladesh) முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின்(Khaleda Zia) உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
வங்கதேச தேசியவாதக் கட்சியின்(BNP) 80 வயதான தலைவரான ஜியா, நவம்பர் 23 முதல் டாக்காவின்(Dhaka) எவர்கேர்(Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“செயற்கை சுவாசக் கருவி(ventilator) உதவியுடன் உள்ள கலிதா ஜியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது. அவர் மிகவும் முக்கியமான கட்டத்தை கடந்து வருகிறார்” என்று மருத்துவர் ஜாஹித்(Zahid ) மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அல்லாஹ்வின் கருணையால், அவர் இந்த நெருக்கடியான காலகட்டத்தை கடக்க முடிந்தால், நாம் ஏதாவது நேர்மறையான செய்தியைக் கேட்கலாம்” என்று ஜாஹித் தெரிவித்துள்ளார்.





