இந்த ஆண்டில் உலகை உலுக்கிய பேரழிவுகளால் $120 பில்லியன் இழப்பு!
2025 ஆம் ஆண்டில் காலநிலை பேரழிவுகள் உலகிற்கு $120 பில்லியன் (£95 பில்லியன்) க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புதிய பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் மிகப் பெரிய பேரழிவுகள் ஆசியாவில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிறிஸ்டியன் எய்ட் தொண்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு, காலநிலை தொடர்பான 10 பேரழிவுகளை அடையாளம் கண்டுள்ளது.
அவை ஒவ்வொன்றும் $1 பில்லியனுக்கும் (£790 மில்லியன்) அதிகமாக சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பகுப்பாய்வின்படி, அமெரிக்காவில், கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ 60 பில்லியன் டொலர்களுக்கும் (£47 பில்லியன்) அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பரில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சூறாவளிகளும் வெள்ளமும் 25 பில்லியன் டொலர் (£20 பில்லியன்) சேதத்தை ஏற்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவில் ஏற்பட்ட வெள்ளம் 11.7 பில்லியன் டொலர் (£9.2 பில்லியன்) இழப்புகளை ஏற்படுத்தியதாகவும், பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளி 5 பில்லியனுக்கு அதிகமான இழப்புகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





