ஏப்ரலில் மீண்டும் நெருக்கடி நிலை: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!
“எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து உள்ளது. இதற்கு அரசாங்கம் இடமளிக்ககூடாது. ஆளும் மற்றும் எதிரணிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.” –
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க Roshan Ranasinghe தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு ,
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிந்தித்து செயல்பட்டால் நல்லது. ஏனெனில் எதிர்வரும் ஏப்ரல் , மே மாதம் ஆகும்போது நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து உள்ளது.
அவ்வாறு நடக்கக்கூடாது என்பதே எனது பிரார்த்தனை. ஏனெனில் நாடு வீழ்ந்தால் மீண்டெழுவது கஷ்டம். எனவே, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நாட்டை விழுவதற்கு இடமளிக்ககூடாது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியான முறையில் பங்கீடு அவசியம். அவர்களை மீண்டெழ வைக்க வேண்டும்.
சிறு மற்றும் மத்தியதர வணிகங்களும் கட்டியெழுப்பட வேண்டும். முயற்சியாளர்களுக்குரிய தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
முதலீட்டாளர்களை நாட்டுக்கு வரவழைப்பதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை, பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு இருந்த செல்வாக்கு உள்ளாட்சிசபைத் தேர்தலில் இருக்கவில்லை. அதன் வெளிப்பாடு தற்போது புலப்படுகின்றது.” – என்றார்.





