கிறிஸ்துமஸ் – கைதிகளுக்கு பார்வையாளர்கள் உணவு கொண்டு வர விசேட ஏற்பாடு
கிறிஸ்மஸ் தினமான இன்று (25) சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை பார்வையாளர்கள் கொண்டு செல்ல சிறை அதிகாரிகள் விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த மத விழாவைக் கொண்டாடுவதற்கும் கைதிகளின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“இந்த ஏற்பாட்டின் கீழ், தற்போதுள்ள சிறை விதிமுறைகளின்படி, பார்வையாளர்கள் ஒரு கைதிக்கு போதுமான உணவு அல்லது இனிப்புகளை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடனும் நலம் விரும்பிகளுடனும் கிறிஸ்மஸ் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள முடியும்”என்று அவர் மேலும் கூறினார்.





