கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் – 05 பேர் பலி!
தான்சானியாவில் (Tanzania) உள்ள கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த ஹெலிகாப்டரானது நோயாளிகளை ஏற்றிச் செல்லும் மீட்பு ஹெலிகாப்டராக செயற்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், விமானி, உள்ளுர் மருத்துவர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் பின்னர் வழங்கப்படும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





