52 லட்சத்திற்கு மொபைல் கேம்களை வாங்கி குடும்ப சேமிப்பை அழித்த சீன சிறுமி
சீனாவில் 13 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் கேமிங்கில் 449,500 யுவான் (ரூ. 52,19,809) செலவழித்து நான்கு மாதங்களில் தனது குடும்பத்தின் சேமிப்பை அழித்துள்ளார்.
மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த பெயரிடப்படாத மேல்நிலைப் பள்ளி மாணவி, வீட்டில் தனது தாயின் டெபிட் கார்டைக் கண்டுபிடித்து, அதை கேமிங் தளத்தில் செலவிட்டுள்ளார்.
சிறுமியின் ஆசிரியை பள்ளியில் அதிக நேரம் போனில் நேரத்தை செலவிடுவதை கவனித்த போது, அந்த இளம்பெண் ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருக்கலாம் என சந்தேகித்தார். இதைப் பற்றி சிறுமியின் தாயிடம் எச்சரித்தார், அவர் தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
அவரது தாயார் வாங்கின் கணக்கில் தற்போது 0.5 யுவான் (ரூ 5) மட்டுமே இருந்தது.
சிறுமி கேம்களை வாங்குவதற்காக 120,000 யுவான் (ரூ. 13,93,828) செலவிட்டதாகவும், விளையாட்டில் வாங்குவதற்காக 210,000 யுவான் (ரூ. 24,39,340) செலவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.
மேலும் 100,000 யுவான் (ரூ. 11,61,590) தனது வகுப்புத் தோழிகளில் 10 பேருக்கு கேம்களை வாங்கச் செலவிட்டுள்ளார்.
“எனது தயக்கம் இருந்தபோதிலும், அவர்களின் விளையாட்டுகளுக்காக அவர்கள் என்னிடம் கேட்டபோது நான் பணம் செலுத்தினேன்,” என்று சிறுமி கூறினார்,