திருகோணமலையில் அதிரடி வேட்டை: ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நபர்
Representative Image
தம்பலகாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (22) இடம்பெற்றுள்ளது.
தம்பலகாகம் பிரதேச புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து ஐஸ் போதைப் பொருள் 11 கிரேம் 710 மில்லி கிரேம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் திணைக்களத்தினால் போதைப் பொருள் வியாபாரிகளின் பெயர் பட்டியலில் உள்ளடங்கிய சந்தேக நபர் எனவும் இவர் தொடர்ச்சியாக விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தம்பலகாமம் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி வர்ணசூரிய உட்பட அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது கிண்ணியா சிவப்பு பாலத்துக்கு அருகில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்
எம்.எம்.உமர் அலி (40வயது) யுனிட் 07 முள்ளிப் பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாகம் பொலிஸார் தெரிவித்தனர்.





