கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்து விழுந்து சீன பொறியியலாளர் மரணம்

கொம்பன்ன வீதியிலுள்ள யூனியன் பிளேஸில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத் தொகுதி கட்டிடத்தின் 8வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டு பிரஜை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கட்டுமான தளத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)