ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிடும் இஸ்ரேல் – ட்ரம்புடன் கலந்துரையாடல்!
ஈரானுக்கு எதிராக புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜுன் மாதத்தில் அமெரிக்கா குண்டுவீசித் தாக்கிய அணுசக்தி செறிவூட்டல் தளங்களை ஈரான் ஏற்கனவே மீண்டும் கட்டமைத்து வருகின்ற நிலையில், மீண்டும் தாக்குதல்களை நடத்துவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாத இறுதியில் புளோரிடாவில் (Florida) இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.
இதன்போதே மேற்படி வான்வழித் தாக்குதல் குறித்து பரீசிலிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் கூறப்படுகிறது.
ஈரான் அணு குண்டு தயாரிப்பதைத் தடுக்க இஸ்ரேலுக்கு “பொறுப்பு” இருப்பதாக மொசாட் உளவுத்துறை அமைப்பின் தலைவர் வலியுறுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.





