ஓன்டன்செட்ரான் ஊசி சர்ச்சை: சர்வதேச பரிசோதனைக்கான முழுச் செலவையும் ஏற்கத் தயார் – இந்திய நிறுவனம் அறிவிப்பு
இலங்கையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட ‘ஓன்டன்செட்ரான்’ (Ondansetron) ஊசி மருந்துகளை, சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்கான முழுச் செலவையும் ஏற்கத் தயாராக இருப்பதாக இந்திய நிறுவனமான மான் பார்மாசூட்டிக்கல்ஸ் அறிவித்துள்ளது.
இந்த மருந்தை ஏற்றிய பின்னர் இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, அதன் நான்கு தொகுதிகளை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மருந்துகள் உரிய வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்துவது இலங்கை அதிகாரிகளின் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டியுள்ள அந்த நிறுவனம், பக்கச்சார்பற்ற சர்வதேசப் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சை வலியுறுத்தியுள்ளது





