தாய்லாந்துடனான மோதல் : கம்போடியாவில் இருந்து வெளியேறிய அரை மில்லியன் மக்கள்!
தாய்லாந்துடனான இரண்டு வார கால எல்லை மோதல் நிலைமை காரணமாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புனோம் பென்னின் (Phnom Penh) உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
தாய்லாந்தின் F-16 விமானங்களால் நடத்தப்படும் பீரங்கி குண்டு தாக்குதல், ரொக்கெட்டுகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குடிமக்கள் பாரிய துயரங்களை அனுபவித்து வருவதாக கம்போடிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 518,611 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மீண்டும் தொடங்கிய எல்லை மோதலால் தாய்லாந்தில் சுமார் 400,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பேங்கொங் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





