ஐரோப்பா செய்தி

நோர்வேயின் பட்டத்து இளவரசிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை – அரண்மனை

நோர்வேயின்(Norway) பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின்(Mette-Marit) உடல்நிலை சமீபத்திய மாதங்களில் மோசமடைந்துள்ளதால், அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை(lung transplant) தேவைப்படும் என்று அந்நாட்டு அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

52 வயதான இளவரசிக்கு 2018ம் ஆண்டு நுரையீரல் ஃபைப்ரோஸிஸ்(pulmonary fibrosis) இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நோய் வடு திசுக்களை உருவாக்கி நுரையீரலை கடினப்படுத்தி சுவாசிப்பதையும், ஆக்ஸிஜன் இரத்த ஓட்டத்தில் நுழைவதையும் கடினமாக்குகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதை காட்டுகிறது. மேலும், அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்” என்று ஒஸ்லோ(Oslo) பல்கலைக்கழக மருத்துவமனையின் சுவாச மருத்துவத் தலைவர் ஆர் மார்ட்டின் ஹோம்(R. Martin Holm) குறிப்பிட்டுள்ளார்.

நோர்வேயில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்புப் பட்டியலில் வழக்கமாக 20 முதல் 40 நோயாளிகள் இருப்பார்கள், இந்நிலையில், இளவரசி இந்த பட்டியலில் இடம் பெற்றால் அவருக்கு முன்னுரிமை சிகிச்சை வழங்கப்படாது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!