ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய ‘பண ஆணை’: அத்தியாவசியப் பொருட்களுக்கு ரொக்கப் பணம் கட்டாயம்

ஆஸ்திரேலியாவில் மளிகை சாமான்கள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு ரொக்கப் பணத்தை ஏற்றுக்கொள்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இது தொடர்பான புதிய கொள்கையை ஆஸ்திரேலியப் பொருளாளர் Jim Chalmers அறிவித்துள்ளார்.

இதன்படி, 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல், பெரிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிலையங்களில் 500 டொலருக்கும் குறைவான கொள்முதல்களுக்கு வாடிக்கையாளர்கள் ரொக்கமாகப் பணம் செலுத்த முடியும். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இந்த வசதி நடைமுறையில் இருக்கும். அதேவேளை, ஆண்டு வருமானம் 10 மில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ள சிறு வணிகர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைபேசி கட்டணம் போன்ற பில்களை ஆஸ்திரேலியா தபால் நிலையங்களில் ரொக்கமாகச் செலுத்தும் வசதியும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!