அலுவலக நேரத்தின் போது கழிவறை சென்றதற்காக பதவிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்!
சீனாவில் 6 மணிநேரம் அலுவலக கழிப்பறையில் நேரத்தை செலவிட்டதால் 26 ஆண்டுகளாக வேலை செய்த ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்தவர் வாங்(35). 26 ஆண்டுகளாக அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு வயிற்றில் சிறு சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அடிக்கடி கழிப்பறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது உடல் நிலையைக் கருத்தில் எடுத்துக் கொண்ட நிர்வாகம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளது. அதன் பின்னர் சில மாதங்களுக்கு பின் அதற்காக அறுவை சிகிச்சை செய்த பின் முழுமையாக குணமடைந்துள்ளார்.தொடர்ந்து பணிக்கு திரும்பியவர் அவர் முன்பு போல் கழிவறையில் நீண்ட நேரம் இருந்து வந்துள்ளார். நிறுவனத்தின் பணி நேரம் 8 மணி நேரமாக இருக்கின்ற நிலையில் 6 மணி நேரம் கழிவறையிலேயே செலவிட்டுள்ளார்.
இதனைப் பொறுக்க முடியாத அவர் வேலை செய்யும் நிறுவனம் வேலையை விட்டுத் தூக்கி உள்ளது. தன்னை பதவி நீக்கியமை தொடர்பில், நீதிமன்றத்தில் ஊழியர் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், பணியில் இருந்து வாங் நீக்கப்பட்டது சரிதான் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.