மோசடி குற்றச்சாட்டு – லெபனானின் முன்னாள் நிதியமைச்சர் பிணையில் விடுதலை!
கடந்த சில மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த லெபனானின் முன்னாள் நிதியமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமின் சலாம் (Amin Salam) நேற்று $100,000 என்ற பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ஆறு மாதங்களுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சலாம் மீது மோசடி மற்றும் பொது நிதியை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக தனியார் காப்பீட்டு நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அந்த நிறுவனங்களை மேற்பார்வையிடும் ஒரு குழுவின் நிதியை தனது சொந்த செலவுகளுக்காகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





