தாய்லாந்துடனான எல்லையை மூடும் கம்போடியா!
அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் காரணமாக தாய்லாந்துடனான எல்லையை மூடுவதாக கம்போடியா நேற்று அறிவித்தது.
முன்னதாக இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு வந்துள்ளது.
கம்போடியாவின் உள்துறை அமைச்சகம், மறு அறிவிப்பு வரும் வரை கடவைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
நேற்று அதிகாலையிலும் தாய்லாந்து இராணுவம் ஜெட் விமானங்களை அனுப்பி தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் கம்போடியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





