ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கார் திருட்டு சம்பவங்கள் – மக்களின் கவனத்திற்கு!!

பிரித்தானியாவில் விமான நிலைய பார்க்கிங்கை இலக்காகக் கொண்ட கார் திருட்டுகள் அதிகரித்து வருவது தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் பயணிகள்   “அதிகாரப்பூர்வமற்ற” நீண்ட கால பார்க்கிங் நடத்துபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிறுவன விதிகளை மீறாத வரை எவரும் பார்க்கிங் ஆபரேட்டராக (operator) வர்த்தகம் செய்யலாம்.

மோசடி நிறுவனங்கள் பெரும்பாலும் சரியான ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கவில்லை, இதனால் கட்டுமான தளங்கள் அல்லது வயல்கள் போன்ற பாதுகாப்பற்ற நிலங்களில் இடவசதியை செய்துக் கொடுக்கிறார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சசெக்ஸ் காவல்துறை மற்றும் கேட்விக் விமான நிலையம் (Gatwick Airport) ஆகிய இரண்டும் இது தொடர்பில்  எடுத்துரைத்துள்ளன.

அவர்கள் அதிகாரப்பூர்வ தொடர்பு இல்லாமல் விமான நிலைய பெயர்களைப் பயன்படுத்தலாம் எனவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!