சிரியாவில் IS தீவிரவாத தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் மரணம்
சிரியாவில்(Syria) இஸ்லாமிய அரசு(IS) குழு உறுப்பினர் ஒருவர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும், ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும்(interpreter) கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
சிரியாவின் பால்மைராவில்(Palmyra) நடந்த இந்த தாக்குதலில் மேலும் மூன்று சேவை உறுப்பினர்கள் காயமடைந்ததாகவும் துப்பாக்கிதாரி உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் வரை 24 மணி நேரம் மறைக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
மேலும், தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை, துப்பாக்கிதாரி யார் என்பது வெளியிடப்படவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump), உயிரிழந்த வீரர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்து தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.





