காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் மூத்த தளபதி மரணம்
காசாவில்(Gaza) நடந்த வாகனத் தாக்குதலில் ஹமாஸின்(Hamas) மூத்த தளபதி ஒருவரைக் கொன்றதாக இஸ்ரேல்(Israel) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவமும் ஷின் பெட்(Shin Bet) பாதுகாப்பு நிறுவனமும் ஒரு கூட்டு அறிக்கையில், காசா நகரில் ஹமாஸின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம்(Qassam ) படைப்பிரிவுகளின் ஆயுத உற்பத்தித் தலைவரான ரயீத் சாத்(Raed Saad) கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது
அக்டோபர் 7ம் திங்க்தி காசா நகரத்திற்கு கிழக்கே இஸ்ரேலிய சமூகங்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது ரயீத் சாத் மிக முக்கியமான கஸ்ஸாம் தளபதிகளில் ஒருவராகக் கருதப்பட்டார் மற்றும் பல படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்கினார்.
மேலும், இந்தத் தாக்குதலில் அவருடன் சேர்ந்து நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பைசல்(Mahmoud Faisal) தெரிவித்துள்ளார்.





