பிரித்தானியாவில் கைக்கடிகாரங்களை கொள்ளையிடும் திருடர்கள் : அதிக லாபம் பார்ப்பதாகவும் தகவல்!
பிரித்தானியாவில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் திருடப்படுவதும், பின் திருடப்பட்ட கைக் கடிகாரங்கள் விற்கப்படுவதும் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலையுயர்ந்த கடிகாரங்களைத் திருடி அவற்றை கறுப்புச் சந்தையில் விற்பது அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகள் அதிக லாபத்தை பெறுவதற்காக கடிகாரங்களை திருடி விற்பதை தொழிலாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, போதை மருந்து விற்பனையை விட விலை உயர்ந்த கடிகாரங்களை திருடுவதில் அதிக லாபம் கிடைப்பதாக முன்னாள் வாட்ச் டீலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் மதிப்புள்ள உயர்தர கடிகாரங்களைத் திருடினால், “சிலர் வாழ்நாளில் சம்பாதிப்பதை விட அதிகப் பணம் சம்பாதிக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில கிரிமினல்களின் விரும்பமான குற்றமாக இது மாறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து, மற்றும் வேல்ஸில் பதிவுசெய்யப்பட்ட திருடப்பட்ட கைக்கடிகாரங்களின் எண்ணிக்கை 6,696 இல் இருந்து 11035 ஆக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.