அமெரிக்காவில் மீளப் பெறப்படும் இலவங்கப்பட்டைப் பொடி (cinnamon powder)! நுகர்வோர் கவனத்திற்கு!
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டுள்ள இலவங்கப்பட்டைப் பொடி (cinnamon powder) மீளப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவு ஈய மாசுபாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15, 2027 என்ற திகதியிடப்பட்ட 40 கிராம் சீல் செய்யப்பட்ட பொதிகளே இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளன.
குறித்த தயாரிப்பு 14 அமெரிக்க மாநிலங்களில் உள்ள பல்வேறு சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இந்த தயாரிப்பை உட்கொள்வது இரத்தத்தில் ஈயத்தின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது. இருப்பினும் இதுவரை யாரும் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
நுகர்வோர் மாசுபட்ட இலவங்கப்பட்டைப் பொடியை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் தகவலுக்கு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





