சீரற்ற வானிலை அனர்த்தம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக உயர்வு.
சீரற்ற வானிலை அனர்த்தம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்
நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த பேரிடரினால் மேலும் 211 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, 4 இலட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்புக்குள்ளானவர்களில், 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் 847 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 5,713 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





