அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு
சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் செலுத்திய ஜீப் வண்டி நேற்று இரவு மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சப்புகஸ்கந்த பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.





