ஜே.வி.பி தலைவர்கள் பலர் V8 வாகனங்களையே பயன்படுத்துகின்றனர் – அர்ச்சுனா எம்.பி கடும் குற்றச்சாட்டு
ஜனாதிபதி முதல் பெரும்பாலான ஜே.வி.பி தலைவர்கள் V8 வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஜே.வி.பி அரசாங்கத்தை நம்பும் கட்சி உறுப்பினர்களுக்கு இவை பற்றி தெரியாது என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பயன்படுத்து் வாகனம் வேறு யாரிடமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
”எம்.பிகளுக்கான வாகன இறக்குமதியை நிறுத்த வேண்டும். ஒருவர் எம்.பி.யாகவும் அமைச்சராகவும் ஆவதால் சூப்பர் வாகனங்கள் தேவையில்லை.
இருப்பினும், ஜனாதிபதி தொடங்கி அரசாங்கத்தில் பலர் V8 வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அரசியல் செய்ய இதுபோன்ற சூப்பர் வாகனங்கள் எனக்குத் தேவையில்லை.
கடந்த மாதம் எனது நான்கு இலட்சம் ரூபாய் சம்பளத்தில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை விநியோகித்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் தேவைப்பட்டால் புலம்பெயர்ந்தவர்களிடம் கோரலாம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.





